தமிழக முதல்வர் ஜெயலலிதா, சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பொது மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை வகுத்துகொண்டிருந்தாலும், சினிமா நடிகர்கள் என்னவோ ஒவ்வொரு நாளும் தங்களது குடும்பத்துடன் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் மே 4ஆம் தேதி கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் முதல்வரை சந்தித்தார்கள். நடிகர் கமல்ஹாசன் முதல்வரை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் நடிகை கௌதமி, மகள் சுப்புலட்சுமி, கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஆகியோரும் சென்றிருந்தனர். இதே போல நடிகர் விஜய்யும், அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரும் முதல்வரை சந்தித்தார்கள். நடிகர் பிரபு அவருடைய மனைவி, பிரபுவின் அண்ணன் ராம்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர். பிரபுவின் சித்தப்பா மகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பிரபுவின் சம்மந்தி குடும்பத்தினர் என அனைவரும் முதல்வரை சந்தித்தார்கள். அதேபோன்று பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், பழம்பெரும் நடிகைகள் சுகுமாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர், சச்சு, எஸ்.என்.லட்சுமி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்பட தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோரும் முதல்வரை சந்தித்தார்கள்.

No comments:
Post a Comment