Monday, 6 June 2011

லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' : அப்துல் கலாம்

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது; 14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.விழுப்புரத்தில் நட உள்ள, 6.5 கோடி மரக்கன்றுகள், 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை அழித்து, 10 லட்சம் டன் ஆக்சிஜனை வெளியிடும். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டை வளப்படுத்தும் நிலைப்பாட்டை, மக்களிடம் கொண்டு வர வேண்டும்.

இது, மாவட்டங்கள் தோறும் செயல்படுத்தக் கூடிய திட்டம். அறிவியல் தாக்கத்தை மாணவர்கள் மத்தியில் வளர்க்க, அறிவியல் கண்காட்சி அமைத்திருப்பது சிறப்பு. இதன் மூலம் இளம் விஞ்ஞானிகளை கண்டெடுத்து அவர்களது திறனை வெளிக்கொணர்வது, இளைஞர் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஒரு தூண்டுகோளாக இருக்கும்.உங்கள் முயற்சி, ஒரு சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்து, தமிழகத்தை ஒரு வளமான நாடாக்கும் திட்டத்தில் முதல் மாவட்டமாக செயல்பட்டு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

மாணவர்களே, உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன... எத்தனை பேர் இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆசிரியர்கள் ஆக கனவு காண்கிறீர்கள். எத்தனை பேர் விண்வெளியில் நடக்க விரும்புகிறீர்கள். கடந்த 12 ஆண்டுகளில், 1.2 கோடி இளைஞர்களிடம் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்.சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், ஒரு லட்சம் இளைஞர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், "இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆகப் போவது யார்?' என கேட்டபோது, சில 100 பேர், கை தூக்கினர். "எத்தனை பேர் சந்திரன், வியாழன் கிரகத்திற்கு போக விரும்புகிறீர்கள்?' என கேட்டபோது, அனைவரும் கை தூக்கினர்.

அதில் ஐந்து பேரை தேர்வு செய்து, "நீங்கள் அரசியல் தலைவரானால், என்ன செய்வீர்கள்?' என கேட்டேன். "10 ஆண்டில் வளர்ந்த நாடாக மாற்றுவேன், லஞ்சத்தை ஒழிப்பேன்' என்றும், "இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என, ஒரு மாணவன் கூறினான். எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் நம்பிக்கை, லட்சியம், கனவைப் பார்க்கிறேன்.வளமான இந்தியாவை வழி நடத்தும் தலைவர்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைக்க, எழுச்சி எண்ணம் கொண்ட இளைஞர்கள் வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. எனவே, கனவு காண்பது அவசியம். லட்சியம் வேண்டும். அது நிறைவேற கடின உழைப்பு, அறிவும், அதை தொடர்ந்து செல்ல வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது. அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர். ஊழலை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுகின்றனர். லஞ்சம் வீட்டிலிருந்து தான் துவங்குகிறது.இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சத்தில் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால், எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதை பார்த்து வளரும் இளைஞர்கள் மனம் எப்படி இருக்கும். அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை இளைஞர்கள் பெற்றோர் மீது பிரயோகித்தால், அவர்கள் லஞ்சத்தை விட்டு வெளியே வருவர் என்பது என் கருத்து.

ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், நல்ல சமுதாயம் உண்டாகும்; நல்ல தலைவர்கள் கிடைப்பர்; நாடு ஊழலில் இருந்து விடுபடும். ஆனால் ஒரு தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்.இந்த மாற்றத்தை ஏற்படுத்த, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளேன். எனக்கு வேண்டும் என்ற சுய நல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. நாம் எண்ணத்தை மாற்றி வீட்டை, குடும்பத்தை தூய்மையாக்கினால் நாடு மாறும். இளைஞர்கள் இதற்கு தயாரானால்; வாருங்கள் வந்து இயக்கத்தை வலுப்படுத்துங்கள். என்னுடைய இணைய தளத்தில் (www.abdulkalam.com) தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் : தயாநிதிக்கு முற்றுகிறது நெருக்கடி?

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., வசம் , "ஏர்செல்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். "ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகீர் வாக்குமூலத்தால், தயாநிதிக்கு நெருக்கடி முற்றுகிறது

காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அந்த காலகட்டத்தில், "டிஷ்நெட் வயர்லெசு'க்கு (ஏர்செல்)14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. கடந்த, 2006ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன், தான் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம், 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்துள்ளன. அவர் பலமுறை முயன்றும், லைசென்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய நிறுவனங்கள், 74 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என்று, மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, சிவசங்கரனின் ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த, "மேக்சிஸ்' கம்பெனிக்கு கைமாறியது.

ஏர்செல் நிறுவனமாக இருந்த போது கோரிய லைசென்ஸ், அது மலேசிய நிறுவனத்திற்கு கைமாறிய உடனேயே, 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், முதலீடு செய்தது.இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டிடிஎச்' நிறுவனம். தயாநிதியின் சகோதரர் கலாநிதி நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம். இதனால் பாதிக்கப்பட்ட சிவசங்கரன், சி.பி.ஐ.,யில் புகார் தெரிவித்தார்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில், அனுபவம் இல்லாத கம்பெனிகளுக்கு எல்லாம் ஒதுக்கீடு அள்ளிவீசப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, கடந்த 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்து, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இதனால், இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

இதைத்தொடர்ந்து கடந்த, 2003-04ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ÷ஷாரியிடம், கடந்த பிப்ரவரி 25ம் தேதி சி.பி.ஐ., விசாரணை நடத்தி, அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்தியது.இதைத்தொடர்ந்து கடந்த மாத மத்தியில், தொழில் அதிபர் சிவசங்கரன், சி.பி.ஐ., வசம் அளித்த மனுவில்,"எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதனால், ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின், "மேக்சிஸ்' நிறுவனத்திற்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இதற்கு தயாநிதி மாறனே காரணம்' என்று புகார் செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், சி.பி.ஐ., எந்நேரமும் சிவசங்கரனிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

வாக்குமூலம்: இந்நிலையில், சிவசங்கரன் நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகி, தான் தெரிவித்த புகார் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் விண்ணப்பித்தது முதல், உரிமம் கிடைக்காததால், மலேசிய நிறுவனத்திற்கு விற்றது வரை, நடந்த அனைத்து உண்மைகளையும் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மலேசிய நிறுவனத்திற்கு, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, அவர் உறுதிப்பட தெரிவித்ததாக கூறப்படுகிறது.சி.பி.ஐ., வசம் சிவசங்கரன் எங்கே வாக்குமூலம் அளித்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் மலேசிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டதற்கு பிறகு, சன் "டிவி'க்கும் மேக்சிஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த நிதி பரிவர்த்தனைகள் குறித்து, சி.பி.ஐ., பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த துவங்கியுள்ளது. இதனால், தயாநிதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தயாநிதி மறுப்பு: இந்நிலையில், தயாநிதி தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில்,"நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன்' என்றார்.

பிரதமர் மவுனம் கலைந்தது : ""தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க நிறுவனங்கள் கவனித்து வருகின்றன. பாரபட்சம் இல்லாமல் நடுநிலையுடன் அவர்கள் செயல்பட அனுமதிக்கப்படுவர்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்காமல், மவுனம் காத்து வருகிறார். அவர் வாய் திறக்க வேண்டும் என, பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள் கோரி வந்தன.

இந்நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ""தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவனித்து வருகின்றனர். அவர்கள் நடுநிலையுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர். ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இருந்தாலும், லஞ்சத்தை ஒரே அடியாக ஒழிக்க, கையில் மந்திரக்கோல் எதுவும் கிடையாது.""யோகா குரு பாபா ராம்தேவிற்கு எதிரான போலீஸ் நடவடிக்கை துரதிருஷ்டவசமானது. இருந்தாலும், அதைத் தவிர வேறு வழியில்லை. லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தப் பிரச்னை, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.

ஒரே நாளில் திருப்பதி கோவிலில் 1 லட்சம் பேர் தரிசனம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 15-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோவிலில் குவிந்துள்ளனர்.
நேற்று மட்டும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரம் வரையிலும், ரூ. 300 கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரமும் ஆகிறது.
அன்னதான கட்டிடம், மொட்டை போடும் இடம், லட்டு கவுண்டர் ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் பக்தர்கள் திறந்தவெளி பகுதிகளில் தங்கி இருந்தனர்.
கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி ஏராளமான அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பூமியின் துணை செயற்கைக்கோளான சந்திரனில் நிறைய கனிம வளம் இருப்பதாக முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வளம் உள்ளதாப என்பது பல தடவை ஆராய்ச்சிகள் செய்த பிறகும் உறுதிபடுத்தப் படாமல் இருந்தது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் மிகத்திறமையாக ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தது.
 
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் அதை உறுதி செய்தனர். இதையடுத்து சந்திரனில் என்னென்ன வளங்கள் உள்ளது என்பதை கண்டு பிடிக்க நாடுகளிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே சந்திரனில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக தண்ணீர் வளம் உள்ளதாக அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி, கர்ஜினிஅறிவியல் கழகம், பிரவுன் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
 
இதுவரை கணிக்கப்பட்டுள்ள அளவை 100 மடங்கு அதிக சுத்தமான தண்ணீர் நிலாவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது சந்திரன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லா நாட்டு விஞ்ஞானிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொசுவை விரட்ட புதிய வகை கியாஸ்; இந்திய வம்சாவழி விஞ்ஞானி கண்டு பிடித்தார்

கொசு கடிப்பதால் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மனிதனை தாக்குகின்றன. எனவே கொசுவை ஒழிக்க எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டும் இதுவரை அதில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது கொசுவை விரட்டுவதற்காக ரசாயன மருந்துகளை கொண்ட கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இவை மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த விஞ்ஞானி தலைமையிலான ஒரு குழுவினர் கொசுவை விரட்டுவதற்கான புதிய வகை கியாஸ் ஒன்றை கண்டுபித்துள்ளனர்.
இதை நாம் படுத்திருக்கும் அறையில் பரவவிட்டால் கொசுக்கள் அங்கிருந்து ஓடிவிடும். பொதுவாக கொசுக்கள் மனிதனின் ரத்த வாடையை மோப்பம் மூலம் உணர்ந்து தான் நம்மை கடிக்கின்றன. ஆனால் இந்த கியாசை அறைக்குள் பரவவிட்டால் கொசுக்களுக்கு ரத்த வாடை தெரியாமல் குழப்பம் ஏற்படுத்துகின்றன.
எனவே மனிதனை கொசுக்கள் கடிக்காமல் அங்கிருந்து ஓடிவிடுகின்றன. விரைவில் இந்த கியாஸ் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கியாஸ் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். கொசுக்களினால் பரவும் மலேரியா நோயால் உலகில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் பலியாகிறார்கள்.
அதாவது 30 வினாடிக்கு ஒருவர் உயிர் இழக்கின்றார். இந்த புதியவகை கியாசால் மலேரியா நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி நடத்துவதை தவிர வேறு வழி இல்லை: மன்மோகன்சிங்

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர்.
 
 இந்நிலையில், நேற்று ஓர் இந்தி பத்திரிகையின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு மன்மோகன்சிங் கூறியதாவது:-
 
போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, துரதிருஷ்டவசமானது. ஆனால் அதைத் தவிர வேறு வழி இல்லை. ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ஊழல் மற்றும் கறுப்பு பணம் தொடர்பாக கவலை அடைந்துள்ளது.
 
அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஊழலை ஒழிப்பதற்கு மந்திரக்கோல் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, இந்தி பத்திரிகை விருது வழங்கும் விழாவில் மன்மோகன்சிங் பேசியதாவது:-
 
பத்திரிகை துறையில் இருப்பவர்கள், பரபரப்புக்காக செய்தி போடுவதற்காக உண்மைகளை திரித்து வெளியிடுவது, சமூகத்துக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பத்திரிகையாளர்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்திற்கு கெடுதலான விஷயங்களை தூண்டிவிடக் கூடாது.
 
பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் வியாதி, கவலைக்குரியது. அற்ப லாபங்களுக்காக பத்திரிகையாளர்கள் தங்கள் கவுரவத்தை தாழ்த்தி கொள்வது துரதிருஷ்டவசமானது. பின்தங்கிய மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து உறுதியான விவாதம் நடத்த ஏற்பாடு செய்வது அனைத்து தரப்பு பத்திரிகைகளின் கடமை.
 
இவ்வாறு அவர் பேசினார்.

கோடிக்கணக்கான ரூபாய் பரிசு: முகவரி இல்லாத இ-மெயில்- எஸ்.எம்.எஸ்.களை நம்ப வேண்டாம்; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
உங்கள் செல்போன் எண் சிறப்பு குலுக்கலில் கோடிக் கணக்கான ரூபாய் பரிசு வென்றிருப்பதாக எஸ்.எம்.எஸ். மூலமாகவும், அல்லது நீங்கள் லாட்டரியில் 5 லட்சம் பவுண்டுகள் அல்லது டாலர் கள் பரிசு பெற்றிருப்பதாக உங்கள் இ-மெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி, மேற்கொண்டு விபரம் அறிய ஒரு குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு உங்கள் மொபைல் போனுக்கோ இ-மெயில் முகவரிக்கோ அடிக்கடி தகவல் வரும்.
 
இதை உண்மை யென நம்பி அந்த இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டால் உங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாய் பரிசு தயாராக இருப்பதா கவும், அதை முறைப்படி அனுப்ப சேவை வரி, சுங்க வரி, கலால் வரி, பேங்க் கிளியரன்ஸ் கமிஷன் ஆகியவற்றுக்காக ரூபாய் 2 லட்சமோ 3 லட்சமோ ஒரு குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்துமாறும் உங்களுக்கு தகவல் கிடைக்கும்.   அதை நம்பி நீங்கள் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டால், இன்னும் கொஞ்சம் பணம் போடச் சொல்லி மீண்டும் உங்கள் இ-மெயிலுக்கு தகவல் வரும். இப்படியே, கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடமிருந்து கறந்து விட்டு, நீங்கள் ஏமாந்து விட்டதாக உணரும்போது தொடர்பு நின்று விடும்.
 
இவ்வாறு ஏமாந்தவர்கள் அவ்வப்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். கடைசியாக புகார் கொடுக்க வந்தவர் ஏமாந்த தொகை ரூ.35 லட்சம் ஆகும். மிக நெருங்கிய நண்பர்கள் (அ) உறவினர்களே 5000 ரூபாயோ 10,000 ரூபாயோ கடன் கொடுக்க முன்பின் யோசிக்கும் இந்தக் காலத்தில் முகம் தெரியாத யாரோ ஒருவர், விண்ணப்பிக்காத போட்டிக்கும் கலந்து கொள்ளாத லாட்டரியிலும் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு அனுப்பப்போவதாக கூறுவதை சிறிதும் நம்ப வேண்டாம்.
 
இம்மாதிரி எஸ்.எம்.எஸ்.களையும் இ-மெயில்களையும் புறக்கணிக்க வேண்டும்.  இதேபோன்று, கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்தோ, ரிசர்வ் வங்கியிலிருந்தோ, செக் செய்வதற்காக அல்லது ஆடிட் நோக்கத்திற்காக அல்லது பாதுகாப்பு காரணத்துக்காக அல்லது கணக்கு சரி செய்வதற்காக என்று உங்கள் வங்கிக்கணக்கு விபரங்களைக் கேட்டு உங்களுக்கு இ-மெயில் வந்தாலும் அல்லது அநாதை ஆசிரமத்திற்கு உங்களை செயலராக நியமிப்பதாக இ-மெயில் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
இவ்வாறு உங்களுக்கு வரும் இ-மெயில்கள் போலியா னவை. ரிசர்வ் வங்கி தனி நபர்களின் வங்கிக் கணக்கு விஷயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை. உங்கள் வங்கிக்கே உங்கள் கணக்கின் ரகசிய குறியீடு எண்களைக் கேட்க அதிகாரமில்லை. இதை நம்பி உங்கள் கணக்கு விபரங்களை அளித்தால் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழு வதும் சுருட்டப்பட்டு விடும். பொதுவாக, விளம்பரங்களை நம்பி, முறையாக விசாரிக்காமல் வேலை வாய்ப்புக்காகவோ, வேறு சேவைகளுக்காகவோ ஆன்லைனில் பணம் அனுப்பு வதும் தேவையற்றது.
 
பணப் பரிவர்த்தனை தொடர்பான சைபர் குற்றங்களில் எதிரிகள் பிடிபட்டாலும் பணத்தை மீட்பது கடினம். எனவே, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பொது மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை வகுத்துகொண்டிருந்தாலும், சினிமா நடிகர்கள் என்னவோ ஒவ்வொரு நாளும் தங்களது குடும்பத்துடன் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் மே 4ஆம் தேதி கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் முதல்வரை சந்தித்தார்கள். நடிகர் கமல்ஹாசன் முதல்வரை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் நடிகை கௌதமி, மகள் சுப்புலட்சுமி, கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஆகியோரும் சென்றிருந்தனர். இதே போல நடிகர் விஜய்யும், அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரும் முதல்வரை சந்தித்தார்கள். நடிகர் பிரபு அவருடைய மனைவி, பிரபுவின் அண்ணன் ராம்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர். பிரபுவின் சித்தப்பா மகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பிரபுவின் சம்மந்தி குடும்பத்தினர் என அனைவரும் முதல்வரை சந்தித்தார்கள். அதேபோன்று பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், பழம்பெரும் நடிகைகள் சுகுமாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர், சச்சு, எஸ்.என்.லட்சுமி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்பட தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோரும் முதல்வரை சந்தித்தார்கள்.

பாரதிராஜாவை எதிர்த்து அமீர் போட்டி

 தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் பாரதிராஜாவை எதிர்த்து இயக்குனர் அமீர் போட்டியிடுகிறார்.

இயக்குனர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரமுறை நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிர்வாகிகள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் இயக்குனர் பாரதிராஜமீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமீர் போட்டியிடுகிறார்.

பாரதிராஜஅணியில் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு எழிலும் போட்டியிடுகின்றனர். அமீர் அணியில் உப தலைவர் பதவிக்கு ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர வசந்தபாலன், பிரபுசாலமன், சிம்புதேவன், ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இலவசத் தங்கத்தாலி-ஜெயலலிதா தொடக்கம்

திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு இலவசத் தங்கத் தாலித் திட்டத்தை இன்று முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

25,000 ரூபாய் நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும், இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி முதல்வர் ஜெயலலிதா 16.5.2001 அன்று ஆணையிட்டார்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டத்தை இன்று (6.6.2011) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து, ஏழு ஏழைப் பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய, நான்கு கிராம் (22 கேரட்) தங்க நாணயம் வழங்கி வாழ்த்தினார்.

இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை ஏற்கனவே வழங்கப்பட்ட ரூபாய் 25 ஆயிரத்தை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டிருந்தார். அதன்படி, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற ஏழு பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக ரூபாய் 50,000/-க்கான காசோலையுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயமும் வழங்கி வாழ்த்தினார்.

முதல்வரிடமிருந்து திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கமும் பெற்றுக் கொண்ட பெண்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுகே டாப் 5இல் தமிழ்ப் படம் ?

சன் பிக்சர்ஸின் நெட்வொர்க் மற்றும் விளம்பரம் காரணமாக எங்கேயும் காதல் யுகே-யில் ஓரளவு வசூலை பெற்றிருக்கிறது.


பிரபுதேவாவின் இந்த பிளாஸ்டிக் காதல் கதை யுகே-யில் நான்காவது வார இறுதியில் ஒரு திரையிடலில் 997 பவுண்ட்கள் வசூலித்தள்ளது. இதுவரை இப்படம் வசூலித்துள்ளது 45,360 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 33.75 லட்சங்கள்.


யுகே-யில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தியப் படங்களைப் பொறுத்தவரை இந்த வாரம் டாப் 5இல் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ்ப் படம் எங்கேயும் காதல்.

யுகே-யில் தமிழ்ப் படங்களின் ஆதிக்கம் சிறிது சிறிதாக அதிக‌ரித்து வருகிறது. ர‌ஜினி, கமல், மணிரத்னம் படங்கள் மட்டுமின்றி ஜெயம் ரவி படமும் யுகே-யில் திரையிடும் அளவுக்கு நிலைமை முன்னேறியிருக்கிறது.

சிம்புவின் வானம் அதன் மூன்றாவது வார இறுதியில் 9 திரையிடல்களில் 7,455 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த வசூல் 10,532 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 7.7 லட்சங்கள்.

ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் அதன் இரண்டாவது வார இறுதியில் 4,465 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த வசூல் 41,465 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 30.32 லட்சங்கள்.

கோ படம் நான்காவது வார இறுதியில் 378 பவுண்ட்களை வசூலித்துள்ளது. யுகேயில் இதன் மொத்த வசூல் 59,916 பவுண்ட்கள். ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 43.81 லட்சங்கள்.

Friday, 3 June 2011

உண்ணாவிரதம் உணர்த்தும் உண்மைகள்: அறிந்து கொள்ளுங்கள்!

வழக்கமாக விரதம் கடைப்பிடிப்பது நமது இந்தியப் பாரம்பரியத்தில் ஒன்றாகும். விரதம் கடைப்பிடிக்கும் பழக்கம் வைதிக சமயங்களில் மட்டுமில்லாமல், கிருத்தவ, இஸ்லாமிய சமயங்களிலும் இருக்கும் ஒரு பழக்கமாகும். நோன்பு கடைப்பிடிப்பதன் காரணங்கள் மாறுபடுகின்றன. பலர் உடலை வருத்தி விரதம் இருந்தால் இறைவன் நன்மைகளை செய்வார் என்னும் நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள். ஆனால் விரதம் இருப்பது வேறு வகையில் நல்லதாக இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்றுக் கூறுகின்றது.
தொடர்ச்சியான விரதங்களைக் கடைப்பிடிப்பதால் அது அவர்களின் இதயத்துக்கு நன்மை செய்கின்றதாம். சிலர் கால இடைவெளி விட்டு தொடர்ச்சியாக விரதம் இருப்பது வழக்கம். பெரும்பாலான இந்தியப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும். இப்படியான தொடச்சியான விரதம் இருப்பது பல்வேறு இருதய நோய்களைக் குணப்படுத்துகின்றதாம். உதா மாநிலத்தில் மருத்துவர்கள் 200 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் விரதம் கடைப்பிடித்த நோயாளிகள் விரைவில் இருதய நோய்களில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனை ஆஞ்சியோகிராம், இரத்த நாளங்களின் எக்ஸ்-ரே போன்றவற்றின் ஊடாக உறுதியும் செய்துள்ளனர்.
அமெரிக்காவில் மோர்மோன் என்னும் மதப்பிரிவினர் மாதத்தில் ஒரு நாள் கண்டிப்பாக உபவாசம் கடைப்பிடிப்பது வழக்கமான ஒன்றாகும். இப்படியாக அவர்கள் நோன்பு இருப்பவர்களுக்கு பிற நோயாளிகளைக் காட்டிலும் 58 சதவீதம் இதய நோய் அறிகுறிகள் குறைவாகக் காணப்பட்டது.
ஆனால் வெறும் உண்ணாவிரதம் இருப்பதால் மட்டுமே இவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக கருத முடியாது எனவும். மோர்மோன் மதப்பிரிவினர்கள் மதுவருந்து, புகைப்பிடிப்பது, காபிப் போன்றவற்றை உட்கொள்ள மாட்டார்கள். ஆகவே அதுவும் அவர்களின் இதய நலனுக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறினார்கள்.
இருப்பின் உண்ணாவிரதம் இருப்பதும் கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாகஅமெரிக்கன் ஜேர்னல் ஆஃப் கார்டியோலஜி தகவல் வெளியிட்டள்ளது. இருப்பினும் இந்த ஆய்வில் எவ்வளவு கால நோன்பு எப்படியான இதய ஆரோக்கியத்துக்கு வழி செய்கின்றது என்பதை உறுதியாக இன்னும் ஆராய்ந்து அறிய முடியவில்லை என மரு. பெஞ்சமின் டி. ஹோர்ன் தெரிவித்தார்.
ஆனால் உண்ணாவிரதத்தினை சதாக் கடைப்பிடிப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லை எனவும். தொடர்ந்து அதிகப்படியான விரதங்களை மேற்கொள்பவர்களுக்கு அழுத்தம் அதிகரித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் வலுவிழந்தல், தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்தல் போன்றவை ஏற்படும். இருப்பினும் மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக விரதம் கடைப்பிடிப்பது இதயத்துக்கு தேவையான பாதுக்காப்பு செயல்முறைகளை உடல் ஏற்படுத்தி நமது இதயத்தின் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்குமாம்.
ஆனால் மரு. ஹோர்ன் மேலும் கூறுகையில், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் விரதம் கடைப்பிடிப்பவர்களை எச்சரிக்கின்றார். சிலருக்கு விரதம் இருக்கும் போது உடலில் இருக்கும் நீர் குறைந்து மாரடைப்பு ஏற்படக் கூட வாய்ப்புள்ளதாம். விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மேலும் ஆய்வுகள் நடந்து வருங்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

kovai24x7.com

ராணா படம் கைவிடப்படும்…

உச்ச நடிக‌ரின் உடல்நிலை தேறி வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியை‌த் தந்திருக்கிறது. என்றாலும் ஆறு மாதங்களுக்கேனும் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த‌க் கால அளவு கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை.
இந்த உண்மையின் அடிப்படையில் அவரது ச‌ரித்திரப் படம் அனேகமாக கைவிடப்படவே சாத்தியம் அதிகமுள்ளது. அதுபற்றி எழுதிய பத்தி‌ரிகைகளின் மீது படத்தின் இயக்குனரும், உச்சத்தின் குடும்பமும் கடும் கோபத்தில் உள்ளனர்.
ச‌ரித்திரப் படம் மிக‌ப் பெ‌ரிய பட்ஜெட்டில் திட்டமிட்டுள்ளது. உச்சம் ஆறு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதும், படம் கைவிடப்படும் என்பதும் படத்துக்கு பணம் போடுகிறவர்களை யோசிக்க வைக்கும், அவர்கள் இந்தப் படத் தயா‌ரிப்பிலிருந்து பின்வாங்கவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே உச்சத்தின் குடும்பமும், இயக்குனரும் பத்தி‌‌ரிகைகள் மீது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
உண்மை எப்போதும் கசக்கும்தானே.

கள்ளநோட்டுகளை தடுக்க நோட்டுகளில் ரூபாய் சின்னம் விரைவில் அச்சடிக்க திட்டம்

கள்ளநோட்டுகளை தடுப்பதற்காக, ரூபாய் சின்னம் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு அச்சகத்தின் விளக்கக் குறிப்பேடு அறிமுக விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதுகுறித்து கூறியதாவது:
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூபாய் சின்னத்தை அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் இடம் பெறுவதற்கு ஐஎஸ்ஓ 4217&க்கான யூனிகோடு ஸ்டாண்டர்டு அத்தாரிட்டி அனுமதி வழங்கி உள்ளது. எனவே, ரூபாய் சின்னத்துடன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும். மேலும், கள்ள நோட்டுகளை தடுப்பதற்காக இப்போது உள்ளதைவிட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த புதிய நோட்டுகளில் இடம் பெறும்.
குறிப்பாக, புதிய ரூபாய் நோட்டு தயாரிப்பதற்கான தாள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். இதனால், அடுத்த 3 ஆண்டுகளில் ரூபாய் நோட்டுகளுக்கு தேவையான மூலப்பொருளில் 80 முதல் 85 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக இருக்கும். இப்போது 95 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைத்து நாணயங்களும் புதிய வடிவமைப்பு மற்றும் ரூபாய் சின்னத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை வரும் ஜூலை மாதத்தில் புழக்கத்துக்கு வரும். இதையடுத்து, பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக திரும்பப்பெறப்படும். இவ்வாறு முகர்ஜி தெரிவித்தார்.
மேலும், அனைத்து நாணயங்களும் புதிய வடிவமைப்பு மற்றும் ரூபாய் சின்னத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை வரும் ஜூலை மாதத்தில் புழக்கத்துக்கு வரும். இதையடுத்து, பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக திரும்பப்பெறப்படும். இவ்வாறு முகர்ஜி தெரிவித்தார்.
ரூபாய்க்கு தனியாக சின்னம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, பொதுமக்களிடமிருந்து அதற்கான மாதிரி வடிவமைப்பை கோரியது. அதில் சென்னையைச் சேர்ந்த உதயகுமாரின் வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டது. அதை ரூபாய் சின்னமாக மத்திய அரசு கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும், இவை இன்னும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறவில்லை.
இதன்மூலம், தனி சின்னங்களைக் கொண்ட கரன்சிகளின் பட்டியலில் ரூபாய் 5ம் இடத்தைப் பிடித்தது. அமெரிக்க ‘டாலர்’, ஐரோப்பிய யூனியனின் ‘யூரோ’, இங்கிலாந்து ‘பவுண்டு’, ஜப்பான ‘யென்’ ஆகிய நான்கு கரன்சிகள் ஏற்கனவே தனி சின்னங்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 25 இடங்களில் பாபாராம்தேவ் சீடர்கள் 50 ஆயிரம் பேர் உண்ணாவிரதம்


ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்துக்கு நாடுமுழுவதும் ஆதரவு பெருகியது. இந்த நிலையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இப்போது பிரபல யோகா குரு பாபாராம்தேவும் இறங்கி உள்ளார்.
வருகிற 4-ந்தேதி முதல் அவர் டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தே தீரும் என்று அறிவித்துள்ளார்.
பாபாராம்தேவ் டெல்லி யில் உண்ணாவிரதம் இருக்கும் போது நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், மாநில தலைநகரங்களில் அவரது சீடர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்கள்.
இந்த அமைப்பின் தமிழ் நாடு பொறுப்பாளரான சம்பத்குமார் கூறியதாவது:-
ஊழலை ஒழிக்க பாபா ராம்தேவ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்திலும் எல்லா மாவட்டங்களிலும் எங்கள் யோகா மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட கிராமம் கிராமமாக ஆதரவு திரட்டி வருகிறோம். அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 4-ந்தேதி 25 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
சென்னையில் எங்கள் அமைப்பு வலுவாக உள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தினமும் 3 ஆயிரம் பேர் யோகா பயிற்சி எடுத்து வருகிறார்கள். 120 மையங்களில் யோகா இலவசமாக கற்று தரப்படுகிறது. நாடு முழுவதும் காலை 6 முதல் 7 மணிவரை யோகா நடக்கிறது.
அதே நேரத்தில் சென்னையில் பல பூங்காக்களில் யோகா இலவசமாக கற்று தரப்படுகிறது. 500 யோகா ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் இலவசமாக பயிற்சி அளிக்கிறார்கள். சென்னையில் அண்ணாசாலை மின்வாரிய அலுவலகம் அருகே 4-ந்தேதி காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கும்.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பல்வேறு அமைப்புகளுக்கும் கடிதம் எழுதி உள்ளோம். நாட்டின் நிர்வாக முறையை மாற்றி அமைக்கும் இந்த போரில் நாட்டு நலனில் அக்கறை உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூடாநட்பு கேடு தரும் : கருணாநிதி பிறந்தநாள் செய்தி


தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று அவரது 88வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி அவர் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ள செய்தியில் : கூடாநட்பு கேடு தரும் என குறிப்பிட்டுள்ளார். சமூக வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பாடுபடும் தி.மு.க., தொண்டர்கள் கூடா நட்பை தொடர்ந்தால் கேடாக முடியும் என்று கூறியள்ளார். தேர்தல் தோல்வி, கனிமொழி கைது ஆகிய சம்பவங்களால் கசப்பில் இருக்கும் தி.மு.க., – காங்., உறவுக்கு இது மறைமுக உணர்த்துதல் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அவர் அண்ணாதுரை சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் அவரது வீட்டில் திரண்ட தி.மு.க., தொண்டர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க., சட்டசபை தலைவர் ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், பொன்முடி ஆகிய கட்சியின் மூத்த தலைவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

It’s an accident or an invited incident

It happens only on our Indian roads, recent reports of WHO (World health organization) says 10% of global road accident deaths occurs in India alone!

The family who losses its member by road accident can call it as fate of that particular person, but as a whole society can we call this 1, 25,000 deaths as fate… can us?

Fundamentally we are wrong; one can easily get a Driving license without stepping into RTO office, by simply paying bribe money to RTO officials through some brokers. It’s impossible to teach driving to a blind person but it possible to get him a license, what a contradictory and that’s how our government employees work blindly for bribe!!!

Mobile phones have become like a Karna’s kavacha kundala and each of us carry at least one, we speak on it while we work, while we play, while we pray, while we study, while we shop, while we eat, while we sh…t,,, the list goes on and on. And why people do the same thing while driving. People are keener on buying gadget like Bluetooth along with there mobile phones because Bluetooth provides them a comfortable conversation while driving. But some times it also comfortable takes them into trauma care to the nearest hospital.

It is fun to watch when a drunker dances, it pathetic to watch him when he drives on the road.  It’s crystal clear that most of the People who comes to bar to take alcohol, comes with there self driven own vehicle. After getting boozed up, they challenge there own lives on roads with there wild ride. 

In Tamilnadu a week before government as announced helmet wearing is compulsory. A News says, in Bhopal the petrol bunks will turn away the two-wheeler riders who are not wearing helmets.

Law enforces to wear helmet for driving two-wheelers but many don’t obey it, some keep it safe at home, some takes it with them just to escape from getting caught by the traffic police. Many Women’s who accelerate on roads looks like a Taliban terrorist covering a big dropping mask over there face and leaving there head just covered with shawls, it can save there complexion but not there lives.
Maximum road accident deaths occurs due to head injuries, its critical for any doctors to save a casualty with a concealed damaged brain, so no one needs much more clarification why helmet is necessary

One can firmly hold his trousers without wearing a hip belt but not sure can hold his life without wearing car’s seat belt, when provision is there to save life why people need to neglect it?

In major metro cities road traffic is becoming worse n worse, at recent days I have seen more unethical behavior by two & four wheelers riders, for instance: With its siren on an Ambulance was flying on the road with casualty inside , the sad thing what I witnessed was, there were number of bikes and cars following the ambulance with same speed! Stupid people they jus wanted to use the open way that had been created by the ambulance. The victim inside was fighting for his own life, and how about this cruel people who chases him for a free open way,,, Disgusting

One should kill the Ego before going on to the road for ride. To make a safe drive, competition needs to be completely avoided. Rule says if some vehicle at our back buzzes the horn and asks for way, we need to give them it right away, because no one knows in what sort of hurry situation the other in.

On the whole to overcome from this nasty death records the vital things to follow will be:

Engineering –India has an approx of 4 million kilometers of road network, one of the largest in the world, had been increasing by more than 10 per cent annually. It’s in the hands of government to make a Quality Solid Road Infrastructure Development.

Enforcement – Every Law is enforced to provide a better way of living, it’s much essential to follow a law which saves lives
Education – General awareness should be created among public society

Above all we care for each and every one whom we belongs to, and we repeatedly heard lot of concerned voices from our family, friends and well wishers saying

-Are you driving, ok I will call you later
-Yeh why don’t you put your helmet
-Don’t drive fast, go slow
-Beware of heavy vehicles in that route
-Night drive is not safe, try to start up early in the morning,,,,, and so on.

These lines might sounds very simple but it carries a great concern and love with in it. So be safe on roads
 Let accident be accident and let not be an invited incident,,,


Author
Jaichand Prabhu

பெட்ரோல், டீசல் விலை: 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம்

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.
இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.
எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.
2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?
பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.
24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.
இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% – ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% – ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.
அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி “ப்ரையாரிக்ராஸ்’ என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.
எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை – 100 கிலோ; சக்கை – 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் – 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி – 50 கிலோ.
எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.
ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.
இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ.
மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.
தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.
தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.
தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.
இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.
கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

ரஜினியை மருத்துவமனையில் பார்த்த சிங்கப்பூர் ரசிகர் சொல்லும் தகவல்கள்!


தலைவர் ரஜினியை பெரும் கட்டுப்பாடுகள், காவல்களுக்கிடையிலும் நேரில் பார்த்து பரவசப்பட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.
அவர் பெயர் ரஜினிபாபு. சிங்கப்பூரில் பணியாற்றும் பாபு, தலைவர் வருகிறார் என்பது தெரிந்ததும், நேராக விமானநிலையத்துக்கு அதிகாலையிலேயே போய் காத்திருந்தாராம். ஆனால் தலைவரை மாற்று வழியில் விமான நிலைய ஊழியர்கள் அழைத்துச் சென்றுவிடவே, அவர் சிகிச்சைப் பெற்றுவரும் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர் பாபுவும் அவரது நண்பர்களும்.
ரஜினியை இன்று காலை நேரில் பார்த்த தன் அனுபவத்தை ரஜினி பாபு இப்படிக் கூறினார்:
“மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினியைப் பார்க்க ஏற்கெனவே ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். கூட்டம் கூடினால் உடனடியாக சிங்கப்பூர் போலீசார் அப்புறப்படுத்திவிடுவார்கள் என்பதால், அருகாமையில் உள்ள கடைகளில் நின்றபடி, கூல்டிரிங்ஸ் குடிக்கும் சாக்கில் மருத்துவமனையையே பார்த்துக் கொண்டிருந்தோம். மருத்துவமனையைப் பார்த்தால் எனக்கு தலைவர் முகம்தான் தெரிந்தது.
ஆனாலும் நேற்று முழுக்க தலைவரைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமே வந்துவிட்டோம். எப்படியோ அங்கிருந்த காவலர்கள், செவிலியர்கள் உதவியுடன் தலைவர் சிகிச்சைப் பெறும் 6 வது மாடிக்குச் சென்றோம். அங்கு ராயல் சூட்டில் தங்கியுள்ளார் தலைவர்.
நாங்கள் போனபோது, அவர் படுக்கையில் இருந்தார். முகத்தில் கொஞ்சம் தாடி வளர்ந்திருந்தது. அவர் நலமாக உள்ளதை நேரில் பார்த்தபிறகுதான் நிம்மதியடைந்தோம். இதனை சக ரசிகர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
நாங்கள் தலைவரைப் புகைப்படம் எடுக்க முயன்றோம். ஆனால் சௌந்தர்யா அந்த நேரத்தில் வந்துவிட்டார். புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும், அப்பா நல்லபடியாக வருவார். அதுவரை பொறுமையாக இருங்கள். அவருக்கு தொந்தரவு தரக்கூடாது என்றும் கூறினார்.
எனவே உடனே நாங்கள் இறங்கி வந்துவிட்டோம். தலைவர் இப்போது ஐசியுவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்து வெளியில் வந்ததும், நாங்கள் மீண்டும் அவரை நிச்சயம் பார்ப்போம். முடிந்தால் புகைப்படம் எடுப்போம்”, என்றார்.

The Hindu : Business News : Reliance Retail to enter wholesale business soon: Ambani


Bracing to meet the challenge from multinational companies in wholesale business, Mukesh Ambani owned Reliance Retail on Friday said it would soon launch cash-and-carry format stores in the segment.
Giving out the strategy of the company during his address at the 37th AGM of the company, Reliance Industries Limited (RIL) chairman Mukesh Ambani said Reliance Retail will soon launch the new format stores to offer numerous national and international brands to small traders across the country.


TN govt’s goals for education sector announced

The AIADMK government will revise the common syllabus prepared for Samacheer Kalvi. Delivering his first address to the 14th Assembly on Friday, Governor Surjit Singh Barnala spoke about the new government's plans for school education.

Governor Barnala said that the government would constitute a committee of experts to study the common syllabus and make necessary recommendations. "It is not acceptable to bring down the standards of school education and harm the future of the children in the name of uniform system of school education.

The education system in the schools should provide equal opportunity to all for nurturing creative talents and imparting practical knowledge. This should also provide a competitive edge to the students of Tamil Nadu. The common syllabus already prepared is not adequate to fulfill this objective," Governor Barnala said.

He was repeating the government's resolution on the postponement of the implementation of Samacheer Kalvi in schools across the state after the first cabinet meeting on May 22.

Governor Barnala said providing free and quality school education to all children would be one of the main objectives of the government. "The government will continue to strengthen the infrastructure and improve the key education-related indicators like reducing the dropout rate and increasing the enrolment ratio," Governor Barnala said. The state is yet to make progress on the implementation of the Right to Education Act, which mirrors these objectives. 

- Times of India

ஐ.டி.ஐ.யில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி


அரசு ஐ.டி.ஐ.யில் உதவித்தொகை, வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஏராளமான அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.) உள்ளது. இங்கு 2011-ம் ஆண்டில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரியில் பிளாஸ்டிக் பிராசசிங் ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்டு புரோக்கிராமிங் அசிஸ்டெண்ட், சீட் மெட்டல் ஒர்க்கர், புட் புரடக்சன், பிட்டர், ஆகிய ஓராண்டு தொழிற்பயிற்சி படிப்புகள் உள்ளன.

பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீசியன், வயர்மென், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், இன்பர்மேசன் டெக்னாலஜி அண்டு எலெக்ட்ரானிக் சிஸ்டம் மெயின்டனன்ஸ், பேட்டன் மேக்கர், மெஷினிஸ்ட், மெக்கானிக் மோட்டார் வெகிக்கில், ரெப்ரிஜிரேட்டர் அண்டு ஏர் கன்டிசனிங் ஆகிய 2 ஆண்டு தொழிற்பயிற்சி படிப்புகளும் உள்ளன.

இதுதவிர மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டனன்ஸ் என்ற 3 ஆண்டு தொழிற்பயிற்சி படிப்பும் உள்ளன. 6 மாதம் மற்றும் ஓராண்டு தொழிற்பயிற்சி படிப்புகளும் உள்ளன. இந்த படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

தற்போது இந்த படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் இந்த மாதம் 21-ந் தேதி வரை வினியோகிக்கப்பட உள்ளன. விண்ணப்ப கட்டணம் ரூ.50. இந்த படிப்புகளில் சேர்க்கப்படும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.1800, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.2100, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.1200, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.1250 என ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சி கட்டணம் முழுவதும் இலவசம். மாணவர்களுக்கு தங்கள் இருப்பிடங்களில் இருந்து ஐ.டி.ஐ.க்கு வந்து செல்ல இலவச பஸ் கட்டண சலுகை அளித்து பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்படிப்புகளில் சேர ஆர்வம் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

சமச்சீர் புத்தகங்கள் : ஜுன் 8 வரை எந்த நடவடிக்கையும் இல்லை


சென்னை உயர்நீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி குறித்த வழக்கு விசாரணை ஜுன் 8ம் தேதி வரவிருக்கும் நிலையில், அதுவரை சமச்சீர் கல்வி புத்தகங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், ஜி.எம். அக்பர் பலி, அட்வகேட் ஜெனரல் ஏ. நவநீத கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, சமச்சீர் கல்வி தொடர்வது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் சமச்சீர் கல்வி முறை 1 மற்றும் 6ம் வகுப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 2011-12 கல்வி ஆண்டில் இருந்து 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையை கொண்டு வர திட்டமிட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.இ.அ.தி.மு.க. அரசு அமைந்ததைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி முறையை ரத்து செய்துவிட்டு பழைய பாடத்திட்டமே நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்தது.

இந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜுன் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் மங்காத்தாவில் விஜய்...?

கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு விஜய், அஜீத் பற்றிய செய்தி தான். அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது. இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார்.  ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா...? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான்.

தற்போது மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் படத்தின் சூட்டிங் முடிந்து இறுதிகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படம் திரைக்கு வருகிறது.

கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து- கேபிள் அரசுடைமை-சூரிய ஒளி மின்சாரத்தில் கவனம்;கவர்னர் உரை விவரம்


சென்னை: தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது. இன்றைய உரையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது. அதே நேரத்தில் தி.மு.க., கொண்டுவந்த திட்டங்கள் மாற்றம் கொண்டு வருவதும் சிலவற்றை ரத்து செய்வதும் , தொழில்துறை ஊக்கம் அளிப்பதும் என பல்வேறு திட்டங்கள் இருந்தன.

கூட்டம் துவங்கியதும் புதிய எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ஜெ., தமிழக மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை துவக்கினார்.

இலவச அரிசி வழங்கும் திட்டம், கேபிள் டி.வி., அரசுடைமையாக்குவது தொடர்பாக உடனடி நடவடிக்கை, கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து , மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, வரும் செப் 15 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும், சூரியஒளி மூலம் மின்சாரத்திற்கு முக்கியத்துவம், மேலவை ‌கொண்டுவரப்படாது, ஓமந்தூரார் தோட்டத்தில் தி.மு.க., அரசின் காலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக பணிகள் நிறுத்தி வைப்பது, இது தொடர்பான கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி உள்ளிட்டவை கவர்னர் உரையில் முக்கியஅம்சங்கள் ஆகும்.

* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மோனா ரயில் திட்டமாக மாற்றப்படும்.

* ஏனைய பகுதிகளில் உள்ள சென்னை அண்ணா பல்கலை., கலைக்கப்பட்டு, சென்னையில் மட்டும், அண்ணா பல்கலை., இணைந்து ஒரே மையமாக செயல்பபடும்.

* மக்கள் நலத்திட்டம் அங்க அடையாளத்துடன் கூடிய புதிய திட்டம்

* முதியோர் உதவித்தொகை வங்கி மூலம் வழங்க ஏற்பாடு.

* பொது விநியோக திட்டத்தை வலுப்படுத்த கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை

*ரூ.50 கோடி செலவில் விலைக்கட்டுப்பாடு நிதியம்

*உற்பத்தி குறைவாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க திட்டம்

* மீனவர்கள் நலன் பேணிக்காக்கப்படும், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் ரூ. ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* வேலைவாய்ப்பை பெருக்கிட ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம்

*வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல திட்டம்

*முதன்மை துறையான வேளாண்மை ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்துள்ளது. இதனை சீர்செய்ய சிறப்பு கவனம்

*கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படும்.இது மக்களின் தேவையை நிறைவேற்றும்படியாக முழுமையாக இல்லை எனவே அனைவருக்கும் தரமான மருத்துவம் பெற புதிய மருத்துவ திட்டம் கொண்டுவரப்படும்.

*சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்குழு.சமச்சீர் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் எதிர்காலம் பாழாவதை இந்த அரசு விரும்பவில்லை. தற்போதுள்ள புது பாடத்திட்டத்தில் தரமானதாக இல்லை. ஆய்வு நடத்திட நிபுணர்குழு அமைக்கப்படும்.

*விவசாயிகள் நலன் கருத்தில் கொண்டு பண்ணைசார் சிறப்பு திட்டம்

*துல்லிய பண்ணை முறை பெரிய அளவில் கொண்டு வரப்படும் அதிகவருவாய் தரும் பயிர்கள் பயிரிட தேவையான உதவிகள் செய்யப்படும்

* வேளாண்மையில் நீடித்த வளர்ச்சிக்கு பாசன நதி முக்கியம், நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

* மேட்டூரில் முன்கூட்டியே (ஜூன் 6ம் தேதி ) தண்ணீர் திறக்க உத்தரவு

* வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டம் ஒருங்கிணைத்து ஏழை குடும்ப நல திட்டம் கண்காணிக்கப்படும்

*வரீ சீர்திருத்தம், விற்பனை வரி, சரக்கு, சேவைவரியை பின்பற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர் பிரச்னையில் சட்டப்படியான நடவடிக்கை எதிர்கொள்வது

*தொழில் துறையில் மோட்டார்வாகனதுறை தகவல் தொழில் நுட்பம், கணனி துறையில் பெரும் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

* நானோ தொழில் நுட்பம் ஊக்குவிக்கப்படும்

*தகவல் தொழில்நுட்பம் தொழில்பூங்கா மூலம் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்

*மின்சாரம், சாலை வசதி குறைவு போக்கிட திட்டம் , மாநில அரசின் நிதியுடன் தனியார் தொழில் நிறுவனங்களுடன்

* மின் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆட்சியில் தொழில் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பாதிப்பு இல்லாத உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக உருவாக்கப்படும், தொழில்துறைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். மின் வழங்கிகள் மூலம் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக செயல்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்திக்கு முழுக்கவனம்.

* தொடர்பு துறைகள் பழைய செயல்பட்டு வருகிறது. அமைச்சர் ஒருபுறமும், செயலகம் ஒரு புறமும் இருப்பது நல்லதல்ல, கூடுதலான செலவு, தரமற்ற கட்டுமானம் இவைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டி.

*சட்ட ஒழுங்கு பேணிகாத்திட முழு நடவடிக்கை எடுக்கப்படும், ஜெ., ஆட்சி பொறுப்பேற்ற கடந்த காலத்தில் அமைதிப்பூங்காவாக நடத்தியுள்ளார். போலீஸ் துறை நவீனப்படுத்தப்படும், குற்றவாளிகள், கண்காணிக்கும் மின் திட்டம் விரைவில் செயலாற்றப்படும்.

*சென்னை நகரில் ஆற்றோரம் வாழும் நபர்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும்.

* கடற்கரையோரங்களில் சிறு துறைமுகங்கள் தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்

*பெண்கள் நலன் நிறைவேற்றுவது இந்த அரசின் முக்கிய தலையாய பணி ஆகும். சுய உதவிக்குழு மூலம் தொடர்ந்து வங்கிகக்கடன் வழங்கப்படும்

* மகளிருக்கு மின்விசிறி, கிரைண்டர் ,மிக்ஸி, செப் 15 ம் தேதி முதல் வழங்கப்படும்

* சூரிய எரிசக்தி ஆரம்பகட்ட செலவு அதிகமாக இருந்தாலும் , தெருவிளக்கு, மற்றும் சமுதாய மாற்றங்களுக்கு தேவையான ஒன்றாக இந்த அரசு கருதுகிறது. எனவே இது ஊக்குவிக்கப்படும்.

*சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்

*சுற்றுச்சூழல் பாதுகாத்திட சிறப்பு முயற்சிகள் , மக்கிப்போகாத பிளாஸ்டிக் தொடர்பான சிறப்பு கவனம் எழுப்பிட புதிய திட்டம், பாலித்தின் பைகளுக்கு தடை

*தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும், பள்ளிச்சேர்ப்பு அதிகரிக்க நடவடிக்கை.

*மேலவை தேவையில்லை என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முடிவு எடுத்திருந்ததால் அதன் அடிப்படையில் மீண்டும் மேலவை ஏற்படுத்த மாட்டாது.

* வீட்டு வசதி திட்டத்தினால் பயனாளிகளுக்கு உரிய பயன் கிடைக்காததாலும், அரசு வழங்கிய நிதிஉதவி மிக குறைவு என்பதாலும், அந்த திட்டம் கைவிடப்ட்டு, அரசே வீடுகள் கட்டத்திர ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி இணைக்கும் தனி இயக்குனரகம் உருவாக்கப்படும்.

அரசு ஊழியர் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்படும்.

*சிறிய கிரமாங்களுக்கும் தார்ச்சாலைகள் அமைத்தல்.

*பொதுமக்களி்ன் நலனை கருத்தில் கொண்டு கேபிள் டி.வி., அரசுடைமையாக்கப்படும்.

* இலங்கை அகதிகள் முகாம் மேம்படுத்துதல், அவர்களது குழந்தைகள் கல்வியில் அக்கறை செலுத்துதல், இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் மறுவாழ்வு பணிகள் நடப்பது தொடர்பான விஷயத்தை இந்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

*கலைஞர் வீட்டு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

* சிறுதுறைமுகங்கள் மேம்படுத்தப்படும் .

* பார்லிமென்ட்டில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வரைவு திட்டம் அமல் படுத்த அரசு வலியுறுத்தும்.

* முறைகேடாக சேர்‌த்த சொத்துக்கள் பறிக்க புதிய சட்டம்

முறையில்லா விருந்தாக இருக்கிறது; கவர்னர் உரை குறித்து ஸ்டாலின் விமர்சனம்: இன்றைய கவர்னர் தாக்கல் செய்த உரை காய்கறி மட்டும் உள்ளதாகவும், முழு விருந்தாக இல்லை என்றும் விமர்சித்தார். தி.மு.க., சட்டசபை கட்சி தலைவர் மு.க., ஸ்டாலின் சபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில்; ஒரு விருந்து என்றால் சாதம் முதல் காய்கறிவகைகள் என இருக்கும். ஆனால் கவர்னர் உரையில் சாம்பார், ரசம் இல்லை, வெறும் காய்கறிவகைகள் மட்டும் உள்ளது. தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள் ரத்து செய்ப்பட்டுள்ளது குறித்து கேட்கையில் , அதே திட்டத்தை பெயரை மாற்றி செயல்படுத்துகின்றனர். ரத்து செய்யப்படுவது வளர்ச்சிப்பாதையில் நேர்கோட்டில் செல்வதற்கு எதிராக உள்ளது என்றார். புதிய சட்டசபை வளாக பணிகள் குறித்து ஆராய நீதிபதி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு இது போன்று எத்தனையோ கமிட்டிகளை பார்த்திருக்கிறோம் எதையும் சந்திப்போம் என்றார்.

மீண்டும் சட்டசபை 6ம் தேதி கூடுகிறது: கவர்னர் உரை முடிந்ததும் சபாநாயகர் தலைமையில் கூடி சட்டசபை அலுவல் குழு ஆய்வ செய்தது. பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த சபாநாயகர் வரும் 6ம் தேதி சட்டசபை கூடுகிறது. அந்நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒத்தி வைக்கப்படும், 7, 8, 9 தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிப்பது, மற்றும் விவாதம் நடக்கும், 10 ம் தேதி பதிலுரையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.


அ.தி.மு.க., அரசு நேர்கோட்டில் செல்கிறது விஜயகாந்த் : எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் கவர்னர் உரை குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்த் : கவர்னர் உரையில் இடம்பெற்றுள்‌ள நல்ல அறிவிப்புகளை தே.மு.தி.க., வரவேற்கிறது. கேபிள் டி.வி., அரசுடைமையாக்குதல், வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்பு ஆகிய நல்ல திட்டங்கள் கவர்ன‌ர் உரையில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.