அரசு ஐ.டி.ஐ.யில் உதவித்தொகை, வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஏராளமான அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.) உள்ளது. இங்கு 2011-ம் ஆண்டில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரியில் பிளாஸ்டிக் பிராசசிங் ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்டு புரோக்கிராமிங் அசிஸ்டெண்ட், சீட் மெட்டல் ஒர்க்கர், புட் புரடக்சன், பிட்டர், ஆகிய ஓராண்டு தொழிற்பயிற்சி படிப்புகள் உள்ளன.
பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீசியன், வயர்மென், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், இன்பர்மேசன் டெக்னாலஜி அண்டு எலெக்ட்ரானிக் சிஸ்டம் மெயின்டனன்ஸ், பேட்டன் மேக்கர், மெஷினிஸ்ட், மெக்கானிக் மோட்டார் வெகிக்கில், ரெப்ரிஜிரேட்டர் அண்டு ஏர் கன்டிசனிங் ஆகிய 2 ஆண்டு தொழிற்பயிற்சி படிப்புகளும் உள்ளன.
இதுதவிர மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டனன்ஸ் என்ற 3 ஆண்டு தொழிற்பயிற்சி படிப்பும் உள்ளன. 6 மாதம் மற்றும் ஓராண்டு தொழிற்பயிற்சி படிப்புகளும் உள்ளன. இந்த படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
தற்போது இந்த படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் இந்த மாதம் 21-ந் தேதி வரை வினியோகிக்கப்பட உள்ளன. விண்ணப்ப கட்டணம் ரூ.50. இந்த படிப்புகளில் சேர்க்கப்படும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.1800, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.2100, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.1200, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.1250 என ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி கட்டணம் முழுவதும் இலவசம். மாணவர்களுக்கு தங்கள் இருப்பிடங்களில் இருந்து ஐ.டி.ஐ.க்கு வந்து செல்ல இலவச பஸ் கட்டண சலுகை அளித்து பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்படிப்புகளில் சேர ஆர்வம் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment