Friday, 3 June 2011

உண்ணாவிரதம் உணர்த்தும் உண்மைகள்: அறிந்து கொள்ளுங்கள்!

வழக்கமாக விரதம் கடைப்பிடிப்பது நமது இந்தியப் பாரம்பரியத்தில் ஒன்றாகும். விரதம் கடைப்பிடிக்கும் பழக்கம் வைதிக சமயங்களில் மட்டுமில்லாமல், கிருத்தவ, இஸ்லாமிய சமயங்களிலும் இருக்கும் ஒரு பழக்கமாகும். நோன்பு கடைப்பிடிப்பதன் காரணங்கள் மாறுபடுகின்றன. பலர் உடலை வருத்தி விரதம் இருந்தால் இறைவன் நன்மைகளை செய்வார் என்னும் நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள். ஆனால் விரதம் இருப்பது வேறு வகையில் நல்லதாக இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்றுக் கூறுகின்றது.
தொடர்ச்சியான விரதங்களைக் கடைப்பிடிப்பதால் அது அவர்களின் இதயத்துக்கு நன்மை செய்கின்றதாம். சிலர் கால இடைவெளி விட்டு தொடர்ச்சியாக விரதம் இருப்பது வழக்கம். பெரும்பாலான இந்தியப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும். இப்படியான தொடச்சியான விரதம் இருப்பது பல்வேறு இருதய நோய்களைக் குணப்படுத்துகின்றதாம். உதா மாநிலத்தில் மருத்துவர்கள் 200 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் விரதம் கடைப்பிடித்த நோயாளிகள் விரைவில் இருதய நோய்களில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனை ஆஞ்சியோகிராம், இரத்த நாளங்களின் எக்ஸ்-ரே போன்றவற்றின் ஊடாக உறுதியும் செய்துள்ளனர்.
அமெரிக்காவில் மோர்மோன் என்னும் மதப்பிரிவினர் மாதத்தில் ஒரு நாள் கண்டிப்பாக உபவாசம் கடைப்பிடிப்பது வழக்கமான ஒன்றாகும். இப்படியாக அவர்கள் நோன்பு இருப்பவர்களுக்கு பிற நோயாளிகளைக் காட்டிலும் 58 சதவீதம் இதய நோய் அறிகுறிகள் குறைவாகக் காணப்பட்டது.
ஆனால் வெறும் உண்ணாவிரதம் இருப்பதால் மட்டுமே இவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக கருத முடியாது எனவும். மோர்மோன் மதப்பிரிவினர்கள் மதுவருந்து, புகைப்பிடிப்பது, காபிப் போன்றவற்றை உட்கொள்ள மாட்டார்கள். ஆகவே அதுவும் அவர்களின் இதய நலனுக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறினார்கள்.
இருப்பின் உண்ணாவிரதம் இருப்பதும் கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாகஅமெரிக்கன் ஜேர்னல் ஆஃப் கார்டியோலஜி தகவல் வெளியிட்டள்ளது. இருப்பினும் இந்த ஆய்வில் எவ்வளவு கால நோன்பு எப்படியான இதய ஆரோக்கியத்துக்கு வழி செய்கின்றது என்பதை உறுதியாக இன்னும் ஆராய்ந்து அறிய முடியவில்லை என மரு. பெஞ்சமின் டி. ஹோர்ன் தெரிவித்தார்.
ஆனால் உண்ணாவிரதத்தினை சதாக் கடைப்பிடிப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லை எனவும். தொடர்ந்து அதிகப்படியான விரதங்களை மேற்கொள்பவர்களுக்கு அழுத்தம் அதிகரித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் வலுவிழந்தல், தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்தல் போன்றவை ஏற்படும். இருப்பினும் மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக விரதம் கடைப்பிடிப்பது இதயத்துக்கு தேவையான பாதுக்காப்பு செயல்முறைகளை உடல் ஏற்படுத்தி நமது இதயத்தின் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்குமாம்.
ஆனால் மரு. ஹோர்ன் மேலும் கூறுகையில், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் விரதம் கடைப்பிடிப்பவர்களை எச்சரிக்கின்றார். சிலருக்கு விரதம் இருக்கும் போது உடலில் இருக்கும் நீர் குறைந்து மாரடைப்பு ஏற்படக் கூட வாய்ப்புள்ளதாம். விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மேலும் ஆய்வுகள் நடந்து வருங்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

kovai24x7.com

No comments:

Post a Comment