தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் பாரதிராஜாவை எதிர்த்து இயக்குனர் அமீர் போட்டியிடுகிறார்.
இயக்குனர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிர்வாகிகள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் இயக்குனர் பாரதிராஜா மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமீர் போட்டியிடுகிறார்.
பாரதிராஜா அணியில் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு எழிலும் போட்டியிடுகின்றனர். அமீர் அணியில் உப தலைவர் பதவிக்கு ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர வசந்தபாலன், பிரபுசாலமன், சிம்புதேவன், ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

No comments:
Post a Comment