Friday, 3 June 2011

கள்ளநோட்டுகளை தடுக்க நோட்டுகளில் ரூபாய் சின்னம் விரைவில் அச்சடிக்க திட்டம்

கள்ளநோட்டுகளை தடுப்பதற்காக, ரூபாய் சின்னம் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு அச்சகத்தின் விளக்கக் குறிப்பேடு அறிமுக விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதுகுறித்து கூறியதாவது:
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூபாய் சின்னத்தை அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் இடம் பெறுவதற்கு ஐஎஸ்ஓ 4217&க்கான யூனிகோடு ஸ்டாண்டர்டு அத்தாரிட்டி அனுமதி வழங்கி உள்ளது. எனவே, ரூபாய் சின்னத்துடன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும். மேலும், கள்ள நோட்டுகளை தடுப்பதற்காக இப்போது உள்ளதைவிட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த புதிய நோட்டுகளில் இடம் பெறும்.
குறிப்பாக, புதிய ரூபாய் நோட்டு தயாரிப்பதற்கான தாள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். இதனால், அடுத்த 3 ஆண்டுகளில் ரூபாய் நோட்டுகளுக்கு தேவையான மூலப்பொருளில் 80 முதல் 85 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக இருக்கும். இப்போது 95 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைத்து நாணயங்களும் புதிய வடிவமைப்பு மற்றும் ரூபாய் சின்னத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை வரும் ஜூலை மாதத்தில் புழக்கத்துக்கு வரும். இதையடுத்து, பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக திரும்பப்பெறப்படும். இவ்வாறு முகர்ஜி தெரிவித்தார்.
மேலும், அனைத்து நாணயங்களும் புதிய வடிவமைப்பு மற்றும் ரூபாய் சின்னத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை வரும் ஜூலை மாதத்தில் புழக்கத்துக்கு வரும். இதையடுத்து, பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக திரும்பப்பெறப்படும். இவ்வாறு முகர்ஜி தெரிவித்தார்.
ரூபாய்க்கு தனியாக சின்னம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, பொதுமக்களிடமிருந்து அதற்கான மாதிரி வடிவமைப்பை கோரியது. அதில் சென்னையைச் சேர்ந்த உதயகுமாரின் வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டது. அதை ரூபாய் சின்னமாக மத்திய அரசு கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும், இவை இன்னும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறவில்லை.
இதன்மூலம், தனி சின்னங்களைக் கொண்ட கரன்சிகளின் பட்டியலில் ரூபாய் 5ம் இடத்தைப் பிடித்தது. அமெரிக்க ‘டாலர்’, ஐரோப்பிய யூனியனின் ‘யூரோ’, இங்கிலாந்து ‘பவுண்டு’, ஜப்பான ‘யென்’ ஆகிய நான்கு கரன்சிகள் ஏற்கனவே தனி சின்னங்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment