தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று அவரது 88வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி அவர் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ள செய்தியில் : கூடாநட்பு கேடு தரும் என குறிப்பிட்டுள்ளார். சமூக வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பாடுபடும் தி.மு.க., தொண்டர்கள் கூடா நட்பை தொடர்ந்தால் கேடாக முடியும் என்று கூறியள்ளார். தேர்தல் தோல்வி, கனிமொழி கைது ஆகிய சம்பவங்களால் கசப்பில் இருக்கும் தி.மு.க., – காங்., உறவுக்கு இது மறைமுக உணர்த்துதல் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அவர் அண்ணாதுரை சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் அவரது வீட்டில் திரண்ட தி.மு.க., தொண்டர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க., சட்டசபை தலைவர் ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், பொன்முடி ஆகிய கட்சியின் மூத்த தலைவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment